உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கல்லுாரி மாணவர்கள் சாதனை

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கல்லுாரி மாணவர்கள் சாதனை

உத்தமபாளையம் : மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர்கள்,பேராசிரியர்கள் வெற்றி பெற்றனர். மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேனியில் ஆக. 26 முதல் செப். 9 வரை நடந்தது. இதில் பல போட்டிகளில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் இக் கல்லுாரி முதல் இடம், செஸ் போட்டியில் விஷ்வா இரண்டாம் இடம், 1500 மீட்டர் ஒட்டத்தில் சரண் 2ம் இடம் பெற்றனர். வாலிபால் போட்டியில் 3ம் இடமும், கபடி, பூப்பந்து போட்டிகளில் நான்காம் இடம், ஜூடோ போட்டியில் 3ம் இடம் பெற்றனர். மாணவிகளுக்கான 400 மீட்டர் ஒட்டத்தில் ஸ்ரீ நதி 2ம்இடம், சிலம்பத்தில் கீர்த்தனா 2ம்இடம், கேரம் ஒற்றையர் பிரிவில் அபிதா 3ம் இடம் பெற்றனர். அரசு ஊழியர்களுக்கான இரட்டையர் இறகுப்பந்து போட்டியில் பேராசிரியர் ஆசிக் உர் ரகுமான், ஆய்வக உதவியாளர் சையது இஸ்ஹாக் முதலிடம் பெற்றனர். இறகு பந்து இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர். பொதுப் பிரிவிற்கான கிரிக்கெட் போட்டியில் பேராசிரியைகள் இரண்டாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், பேராசிரியர்களை தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச். முகமது மீரான் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை