கூடலழகிய பெருமாள் கோயிலில் தூய்மை பணி
கூடலுார்: -கூடலுாரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி சார்பில் கூடலழகிய பெருமாள் கோயிலில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சித் தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார். கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கவுன்சிலர் லோகந்துரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். கோயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.