ஆம்னி பஸ்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டுவர கூடாது கலெக்டர் எச்சரிக்கை
தேனி: ஆம்னி பஸ்களில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை எடுத்து வர அனுமதிக்க கூடாது என கலெக்டர் ஆம்னி பஸ் உரிமையாளர்களை கலெக்டர் ஷஜீவனா எச்சரித்தார்.தேனியில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கும் பஸ் உரிமையாளர்கள், மருந்து கடை உரிமையாளர்களுடன் போதைப்பொருட்கள் விற்பனை, தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.அதில் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்துகளை யாருக்கும் விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் பெங்களூரு சென்று வரும் ஆம்னி பஸ்களில் வெளிமாநில மதுபானங்கள், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை எடுத்துவர பயணிகள் உட்பட யாரையும் அனுமதிக்க கூடாது. பஸ்களில் ஏற்றப்படும் பொருட்களை சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றி வந்தால் பஸ் உரிமையாளர், டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தள்ளார்.