உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

தேனி : கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலத்துறை சார்பில் 'குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்தல்' என்ற தலைப்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயசுதா, ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகள் பற்றிய புகார்கள், சிறார் திருமணங்கள், மாணவர்கள் இடைநிற்றல் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை