மேலும் செய்திகள்
கேரளாவில் பறவை காய்ச்சல்
28-Dec-2025
டாக்டர் பழனியப்பன் நினைவு விருது வழங்கும் விழா
28-Dec-2025
படிக்கட்டை இடித்த 7 பேர் மீது வழக்கு
28-Dec-2025
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் வார்டு சபைக் கூட்டத்தில் நிறைவேற்றி வழங்கிய தீர்மானங்களை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர். மாநில அரசு உத்தரவில் அக்.27 ல் நகராட்சிகளில் கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு சபை கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கவுன்சிலரும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றி வழங்கவும், அதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் வார்டு சபை கூட்டங்கள் பொது மக்கள் முன்னிலையில் நடந்தன. இக்கூட்டத்தில் பல வார்டுகளிலும் சுகாதார மேம்படுத்துதல், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், அடிப்படை வசதிகள் செய்து வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். தீர்மானங்களை சமர்ப்பித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையிலும், நகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதிகாரிகளிடம் கூறினாலும் சரிவர பதில் அளிப்பதில்லை என, கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025