அறிமுகமற்ற நபர்களுக்கு பணம் அனுப்பும் முன் பரிசோதிக்கும் வசதி; சைபர் கிரைம் இணைய தளத்தில் அறிமுகம்
தேனி : அறிமுகம் இல்லாதவர்களுக்கு பணம் அனுப்பும் போது அவர்களின் அலைபேசி எண் , வங்கி கணக்குகள் தேசிய வழக்கில் சிக்கி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.சமீப காலமாக பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம், அரசு துறைகளின் மானிய கடன் திட்டத்தில் பயன் பெறலாம், சில பொருட்கள் தள்ளுபடி , குறைந்து விலையில் விற்கபடுகிறது என அலைபேசிகளுக்கு அழைப்புகளும், சமூக வலைதளங்கள் மூலம் குறுஞ்செய்திகளும் அனுப்படுகின்றன. இதனை நம்பும் பொதுமக்கள் பலர் ஏமாறுவது தொடர்கிறது. இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'அலைபேசி மூலம் பணம் இரட்டிப்பு உள்ளிட்ட எந்த ஒரு நிதி மூதலிடு தொடர்பான பரிவர்தனைகளுக்கு முன் நம்பகமானவர்களுக்கு அனுப்புகிறோமா என உறுதி செய்ய வேண்டும். மோசடி என தெரிந்தால் www.cybercrime.gov.inஎன்ற இணைய முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.புதிய அறிமுகம்இந்த தளத்தில் Report & check suspect என்ற புதிய வசதி அறிமுகம் செய்துள்ளனர். இந்த பக்கத்தில் சந்தேக அலைபேசி எண், வங்கி கணக்கு எண், யு.பி.ஐ., ஐ.டி.,களை பதிவு செய்தால், அந்த கணக்குகள் மீது தேசிய அளவில் ஏதேனும் புகார்கள் இருந்தால் தெரியும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு பணம் அனுப்பும் முன் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். என்றனர்.