மேலும் செய்திகள்
இரு வாலிபர்கள்மீது போக்சோவில் வழக்கு
04-Sep-2025
தேவதானப்பட்டி : பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் காந்திநகர் பாண்டி 55. ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயினை மீன்வளத்துறை மூலம் 2022 முதல் மூன்றாண்டுகளுக்கு மீன்பாசி ஏலம் குத்தகைக்கு எடுத்துள்ளார். மீன் பிடித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்மாய் தண்ணீரில் மர்ம நபர்கள் விஷம் கலந்தனர். இதனால் ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள் இறந்து மிதந்தன. அருகில் நாய் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து கண்மாய் காவலர் செல்லப்பாண்டி, பாண்டியிடம் தகவல் தெரிவித்தார். இவரது புகாரில், ஜெயமங்கலம் எஸ்.ஐ., முத்துப்பெருமாள் தண்ணீரை எடுத்து சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்து விசாரிக்கிறார்.
04-Sep-2025