உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் டிச.27ல் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு தாங்களாகவே அகற்றிட வேண்டுகோள்

போடியில் டிச.27ல் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு தாங்களாகவே அகற்றிட வேண்டுகோள்

போடி: போடி மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் டிச. 26 க்குள் தாங்களாகவே அகற்றிட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.தமிழக, கேரளாவை இணைக்கும் மூணாறு, போடிமெட்டு, குரங்கணி, டாப்ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மெயின் ரோடாக போடி உள்ளது. தினமும் தமிழக, கேரளா பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்கள், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.போடி காமராஜ் பஜார், தேவாரம் மெயின் ரோட்டில் தட்டிகள், பிளாட்பார கடைகள், கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் 60 அடி மெயின் ரோடு தற்போது 30 அடியாக சுருங்கி உள்ளது. போடி பஸ்ஸ்டாண்டில் இருந்து திருமலாபுரம் ரோட்டில் பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்கு வரத்து நெரிசலால் மாணனர்கள், பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். அடிக்கடி விபத்துகளும், மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.போடி மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் ஷஜீவனா நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டார்.நெடுஞ்சாலைத்துறை மூலம் கடந்த வாரம் ரோட்டின் இருபுறமும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதனை ஒட்டி மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் டிச. 26 ம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும். அப்படி அகற்றாவிடில் நெடுஞ்சாலைத்துறை சர்வே செய்து எவ்வித பாரபட்சமும் இன்றி ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை