உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செயல்படாத ரேஷன் கடை கண்காணிப்பு குழுக்கள்

செயல்படாத ரேஷன் கடை கண்காணிப்பு குழுக்கள்

பெரியகுளம், : ரேஷன் கடை கண்காணிப்பு குழுக்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது. இவை மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேஷன் பொருட்கள் வினியோகம் அதிலுள்ள பிரச்னைகள் பற்றி கண்காணித்து நடவடிக்கை எடுக்க சில ஆண்டுகளுக்கு முன் தாலுகா அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டன. இதில் ஆர்.டி.ஓ., தலைவராகவும், தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், எம்.எல்.ஏ., தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 11 உறுப்பினர்கள் இந்த குழுவில் நியமனம் செய்யப்பட்டனர். இக் குழு அமைக்கப்பட்டதோடு சரி அதன் பிறகு செயல்பாடுகள் இன்றி முடங்கி விட்டது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் மக்கள் பல பிரச்னைகளை சந்திக்கின்றன. ரேஷன் அரிசி கடத்தலும் தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த குழுவின் கூட்டத்தைக் கூட்டி ரேஷன் பொருட்கள் வினியோகத்தை கண்காணிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை