உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 'காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.இணை இயக்குனர், உதவி இயக்குனர் உதவிப்பொறியாளர், ஒன்றியபொறியாளர் பதிவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட துணைத்தலைவர் செல்லராஜா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் தாமோதரன், பொருளாளர் அர்ஜூனன், துணைத்தலைவர் முனிராஜ், இணைச்செயலாளர் சின்னசாமி, மகளிர் ஒருங்கிணைப்பாளர் பேபி, மாவட்ட தணிக்கையாளர் சரவணன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ