மேலும் செய்திகள்
டூ - வீலரை சத்தமாக ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது
01-Nov-2024
தேவதானப்பட்டி: பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அடிகுழாய் உவர்ப்பு நீரையே பருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.தேவதானப்பட்டி பேரூராட்சி 9 வது வார்டு ஆர்.எஸ்., புரம் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிப்போர் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இந்த வார்டில் பெண்கள் சுகாதார வளாகம் இல்லாததால் அருகில் உள்ள கரட்டு பகுதியை திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் இப் பகுதியில் சுகாதார கேடு நிலவுகிறது. அழையா விருந்தாளியாக வரும் பாம்புகள்
அன்னக்கிளி (ஆர்.எஸ்.புரம்), தேவதானப்பட்டி: பேரூராட்சி 9 வது வார்டில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தட்டுப்பாட்டை சமாளிக்க அடிகுழாய் உவர்ப்பு நீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. குடிநீர் குழாய் அருகே சாக்கடை செல்வதால் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தெரு விளக்கு இல்லாததால் இரவில் அழையா விருத்தாளியாக தினமும் குடியிருப்பு பகுதியில் ஏதாவது ஒரு வீட்டில் விஷ பூச்சிகள் நுழைகிறது. அதனை விரட்டி விட்டு தூங்குவதற்குள் விடிந்து விடுகிறது. இதனால் அச்சத்துடன் இரவு தூக்கம் இன்றி அவதிப்படுகிறோம். சுகாதாரம் வளாகம் இல்லை
பிரியா, ஆர்.எஸ்.புரம், தேவதானப்பட்டி: இந்த வார்டில் பெண்கள் சுகாதார வளாகம் இல்லை. இதனால் திறந்த வெளியில் மறைவான பகுதிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் சிரமமாக உள்ளது. வார்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. இது வரை எந்த நடவடிக்கை இல்லை. ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் வார்டு பகுதியை விசிட் செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தேங்கும் கழிவுநீரால் காய்ச்சல்
சுதா, ஆர்.எஸ்.புரம், தேவதானப்பட்டி : ஆர்.எஸ்.புரம் தெருவில் ரோடு வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் தெருவில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கும். பொதுக்குழாய் அருகே சாக்கடை உள்ளது. சாக்கடை முறையாக சுத்தம் செய்யததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி தினமும் கொசுக்கடியால் அவதிப்படுகிறோம். அடிக்கடி சிறுவர்கள் முதல் வயதில் மூத்தவர்கள் வரை காய்ச்சலினால் அவதிப்படுகிறோம் என்றார்.இப் பகுதிக்கு அடிப்படை வசதி குறைபாடு பற்றி விபரம் கேட்க பேரூராட்சி செயல் அலுவலர் விஜயாவை தொடர்பு கொண்ட போது அலைபேசி சுவிட்ச் ஆப் ஆகிஇருந்தது.-
01-Nov-2024