மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
10 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
10 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
13 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
13 hour(s) ago
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் திருவிழா காலங்களில் கரும்பில் தொட்டில்கட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கினர்.தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. இக்கோயிலின் மாசி மகாசிவராத்திரி திருவிழா மார்ச் 8 ல் துவங்குவதை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் கையில் காப்பு கட்டி தங்களது நேர்த்தி கடனுக்கான விரதத்தை துவக்கினர். கோயில் திருவிழா காலங்களில் தீச்சட்டி, பால்குடம், கணவன், மனைவி தம்பதிகள் சகிதமாக தங்களுக்கு குழந்தை வரம் கொடுத்த காமாட்சியம்மனுக்கு கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். இவர்கள் 25 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை விரதம் மேற்கொள்வர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago