உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திடீர் தேர்தல் அறிவிப்பு ஊராட்சிகள் தயாராக தாமதம்

திடீர் தேர்தல் அறிவிப்பு ஊராட்சிகள் தயாராக தாமதம்

தேனி : தேனி மாவட்டத்தில் பல ஊராட்சிகளில், தேர்தல் ஏற்பாடுகளே இல்லாமல், அமைதியாக காணப்பட்டன. தேர்தலுக்கான மனுக்களை பெறுவதற்கு, நகராட்சிகளில் அந்தந்த நகராட்சி கமிஷனர்கள் தேர்தல் நடத்தும், அலுவலர்களாகவும். பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கும், செயல் அலுவலர்கள் தேர்தல் அலுவலர்களாகவும், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பி.டி.ஓ.,க்கள் தேர்தல் அலுவலர்களாகவும், ஊராட்சி வார்டு மெம்பர்களுக்கு, உதவியாளர் பதவிக்கு இணையான பதவியில் உள்ள ஊழியர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். பல ஊராட்சிகளில் மனுதாக்கல் செய்வதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில், அறிவுப்பு எதுவும், நோட்டீஸ் பலகையிலோ, அலுவலக வாசலிலோ ஒட்டப்படவில்லை. மனு வாங்குவதற்கான தேர்தல் அலுவலரும் பகல் 12 மணி வரை அலுவலகத்திற்கு வரவில்லை.இதே நிலை பல ஊராட்சிகளில் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை