உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 8 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் அனுப்பிவைப்பு

8 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் அனுப்பிவைப்பு

தேனி : மாவட்டத்தில் புதிய வாக்களராக பதிவு செய்த 8 ஆயிரம் பேருக்கு தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்டத்தில் 2023 அக்., 27 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் 2023 நவ., 4,5,25,26 ல் நடத்தப்பட்டன. இதில் புதிய வாக்களராக பதிவு செய்ய 9806 பேர், முகவரி, தொகுதி மாற்றம்,இரட்டை பதிவு என 2887 பேர் பதிவு செய்திருந்தனர். இம் முகாம்கள், இணைதளம் மூலமாக 2023 டிச.9 க்குள் பதிவு செய்திருந்த 8ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், தபால் மூலம் அனுப்பப்பட்ட அடையாள அட்டைகள் திருப்பி வந்தால் அப்பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ