உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் அரசு, தனியார் பஸ்கள் இயக்குவதில் தகராறு 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு

போடியில் அரசு, தனியார் பஸ்கள் இயக்குவதில் தகராறு 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு

போடி: போடி பஸ் ஸ்டாண்டில் நேரத்தின் அடிப்படையில் பஸ்கள் இயக்குவதில் அரசு, தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ரோட்டை மறித்து நிறுத்தப்பட்ட பஸ்களால் போக்குவரத்து 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன.போடி பஸ்ஸ்டாண்டில் இருந்து அதிகாலை 5:50 முதல் காலை 6:05 மணி அளவில் தேனி மார்க்கமாக அரசு பஸ்கள் இயங்குவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் வேறு பஸ்கள் இயங்க அனுமதி இல்லை. அதன் பின் காலை 6:07 மணியளவில் போடியில் இருந்து மதுரைக்கு தனியார் பஸ்கள் இயங்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நேரங்களின் அடிப்படையில் நேற்று காலை பஸ்கள் இயக்காமல் முந்தி செல்ல முயன்றதால் அரசு, தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அரசு, தனியார் பஸ் டிரைவர்கள் இருவரும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்களது பஸ்களை ரோட்டை மறித்து நிறுத்தி கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு பஸ்கள் இயக்க முடியாத நிலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. இதனால் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். இருதரப்பினர் பேச்சு வார்த்தையில் பேசி முடிவு செய்யலாம் என கூறியதன் பேரில் பஸ்கள் இயங்கின. குறிப்பிட்ட நேரத்திற்குள் தனியார் பஸ் இயக்க முடியாததால் பஸ் ஸ்டாண்டில் நின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை