| ADDED : ஜன 07, 2024 07:14 AM
தேனி: உணவுக்குழாயில் புற்று நோய் பாதித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் உணவுக்குழாயை அகற்றி இரைப்பையை உணவுக்குழாய் துவங்கும் இடத்தில் பொருத்தி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.தேனியை சேர்ந்த 46 வயது பெண் உணவு உட்கொள்ள முடியாமல், எடை குறைந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடல் இரைப்பை நிபுணர் டாக்டர் அசோக்குமார் 'எண்டோஸ்கோப்பி' பரிசோதித்த போது உணவு பாதை முற்றிலும் அடைபட்டது கண்டறியப்பட்டது. அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து சோதனை செய்ததில் புற்றுநோய் உறுதியானது.மருத்துவக்கல்லுாரி முதல்வர் பாலசங்கர் ஆலோசனையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் முத்து, டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் டாக்டர்கள் கணபதி, அய்யனார், நர்மதா, சினோ உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் புற்றுநோய் பாதித்த உணவுக்குழாuய அகற்றி இரைப்பை நேரடியாக உணவுக்குழாய் துவங்கும் இடத்ததில் இணைத்தனர். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அப்பெண் உடநிலை சீரானது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் கூறுகையில், புகையிலை, மது, தவறான உணவுப்பழகத்தால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுகிறது. உணவு உண்ணும் போது எரிச்சல், சாப்பிட்ட பின் வாந்தி வருவது போன்ற உணர்வு தொடர்ந்து ஏற்படுவதால் சாப்பிட முடியா நிலை இதன் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.