மேலும் செய்திகள்
அங்கன்வாடி திறக்காததால் சிரமம்
25-Jul-2025
போடி: போடி -- தேனி மெயின் ரோடு கோடாங்கிபட்டியில் தெரு நாய்கள் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். தேனி மாவட்ட உள்ளாட்சிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இவைகள் தெருக்கள் மட்டும் இன்றி மெயின் ரோடுகளில் டூவீலரில் செல்வோரை துரத்தியும், கடித்தும் வருகின்றன. இதனால் டூவீலரில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லாததால் நகரம் முதல் கிராமங்கள் வரை நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் சேர்ப்பதோடு, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குழந்தைகள் அச்சம் பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் இடதுபுறம் அங்கன்வாடி மையம் எண் 19, உள்ளது. இங்கு 30க்கும் அதிகமான சிறார்கள் உள்ளனர். மையத்தின் 20 அடி நீள சுற்றுச்சுவர் விழுந்து பாதுகாப்பு இன்றி உள்ளது. இதனால் இரவில் சிலர் மதுபாராக பயன்படுத்துகின்றனர்.தெருநாய்கள் உள்ளே செல்வதும், சிறுவர்களை விரட்டுவதும், பின்னர் நாய்களை அங்கன்வாடிபணியாளர்கள் விரட்டுவதும் தொடர்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்குள் நகராட்சி நிர்வாகம் சுற்றுச்சுவரை அமைக்க வேண்டும்.-
25-Jul-2025