உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேன் கவிழ்ந்து டிரைவர் பலி

வேன் கவிழ்ந்து டிரைவர் பலி

ஆண்டிபட்டி : தெப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் வேல்முருகன் 20, டிரைவர். நேற்று முன்தினம் தெப்பம்பட்டியை சேர்ந்த முருகனின் பிக்கப் வாகனத்தை எடுத்துக்கொண்டு கணேசபுரம் ரோட்டில் உள்ள கணேசனின் தோட்டத்தில் மரிக்கொழுந்து ஏற்றுவதற்கு சென்றார். அங்கு லோடு இல்லாததால் வேறு இடத்திற்கு செல்வதற்காக வாகனத்தை அப்பகுதியில் திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து வேல்முருகனின் தாய் மகாலட்சுமி புகாரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை