உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெயிலால் வைகை ஆறு உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்தது! குடிநீருக்காக பெரியாறு அணையில் நீர் திறப்பு அவசியம்

வெயிலால் வைகை ஆறு உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்தது! குடிநீருக்காக பெரியாறு அணையில் நீர் திறப்பு அவசியம்

மாவட்டத்தில் சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு விட்டது. ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களுக்கு பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர், வள்ளல் நதி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் வினியோகம் உள்ளது. குன்னூர் வைகை ஆற்றின் மணல் பரப்புள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் உறைகிணறுகள் மூலம் குடிநீர் பம்ப் செய்து அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதமாக வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லை. உறை கிணறுகளில் கிடைக்கும் குறைந்த அளவு நீரை அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து வழங்க முடியவில்லை. பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் அவசியம் திறந்து விட வேண்டும்.குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் வைகை ஆற்றில் 4 உறை கிணறுகள் அமைத்து 49 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் உள்ளது. வள்ளல் நதி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 3 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. உறை கிணறுகளில் சுரக்கும் நீர் 23 கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்துள்ளது. இதனால் அனைத்து பகுதிக்கும் குடிநீர் வழங்க முடியவில்லை. பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து இருந்தால் மட்டுமே உறை கிணறுகளில் நீர் சுரப்பு கிடைக்கும். கோடையில் அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும் என்றும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி