உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எட்டு ரேஷன் கடைகளுக்கு அபராதம்

எட்டு ரேஷன் கடைகளுக்கு அபராதம்

தேனி : மாவட்டத்தில் 77 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 526 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. கலெக்டர் ஷஜீவனா ரேஷன் கடைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஜன.,1 முதல் ஜன.,6 வரை தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் 8 கடைகளில் பொருட்களின் இருப்பு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமாரிடம் கேட்ட போது, 'முழு அறிக்கை கிடைத்த பிறகே அபராதம் பற்றிய விவரங்கள் கூறப்படும்.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ