உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காற்றாலையில் ரூ.4 லட்சம் மின் உபகரணங்கள் திருட்டு

காற்றாலையில் ரூ.4 லட்சம் மின் உபகரணங்கள் திருட்டு

ஆண்டிபட்டி: க.விலக்கு பந்துவார்பட்டி பகுதியில் பல காற்றாலைகள் உள்ளன. காற்றாலைகளுக்கான கட்டுப்பாட்டு அறை கொடுவிலார்பட்டியில் உள்ளது. ஜூலை 12 நள்ளிரவில் பந்துவார்பட்டி அருகே உள்ள காற்றாலையிலிருந்து எந்தவித சிக்னலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நிறுவன மேலாளர் முருகன் மற்றும் பாதுகாவலர்கள் அப்பகுதியில் பார்வையிடச் சென்றுள்ளனர். சிஎல்பி 36 காற்றாலை அருகே இருந்த அறையின் கதவை உடைத்து அங்கிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான மின் உபகரணங்களை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து முருகன் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை