நாய் குறுக்கே ஓடிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
தேனி: தேனி போடேந்திரபுரம் தங்கராஜ் 55. கோவையில் மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிகிறார். இவரது மகன் ரேவந்த்பாண்டி 30. இருவரும் சொந்த விஷயமாக தேனி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை பார்த்துவிட்டு தனித்தனி டூவீலரில் வீடு திரும்பினர்.திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோட்டில் ஆதிபட்டி ரயில்வே மேம்பாலத்தில் சென்ற போது, தங்கராஜ் டூவீலர் ஓட்டி வந்த போது குறுக்கே நாய் ஓடியது. இதில் நிலைதடுமாறி தங்கராஜ் கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ரேவந்த்பாண்டி அழைத்து சென்றார். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் வழியிலேயே தங்கராஜ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். ரேவந்த்பாண்டி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.