உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / யானைகள் முகாம்; சுருளி அருவியில் குளிக்க தடை

யானைகள் முகாம்; சுருளி அருவியில் குளிக்க தடை

கம்பம் : சுருளி அருவி அருகே யானைகள் கூட்டம் குட்டிகளோடு முகாமிட்டிருப்பதால், நேற்று காலை முதல் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்தது.சுருளி அருவியில் கடந்தாண்டு முதல் தண்ணீர் தொடர்ந்து கொட்டி வருகிறது. கோடையில் அருவி வற்றி விடும். ஆனால் கடத்த 2023 மார்ச் முதல் அருவியில் தண்ணீர் தொடர்ந்து விழுந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மேகமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை ஆய்வு செய்த போது கருப்பசாமி கோயில் பகுதியில் அருவிக்கு மிக அருகில் யானைகள் கூட்டம் குட்டிகளோடு முகாமிட்டுள்ளது தெரிந்தது. யானைகளின் பிளிறல் சத்தமும் கேட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களை வனத்துறையினர் வெளியேற்றினர்.தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக கிழக்கு ரேஞ்சர் பிச்சைமணி அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை