உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு

கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு

போடி: போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் 'தீன் தயாள் யோஜனா' திட்டத்தின் கீழ் மாணவர்களிடையே தபால் தலை சேகரிப்பை ஊக்கப்படுத்தவும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு தபால் துறை சார்பில் நடந்தது. போடி தலைமை தபால் அலுவலர் சதீஷ் முன்னிலை வகித்தார். சமீபத்தில் நடந்த நிகழ்வுகள், வரலாறு, சமூக அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பாடங்களில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சியினை பள்ளி ஆசிரியைகள் சந்திரகலா, முத்துலட்சுமி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ