மேலும் செய்திகள்
பார்சல் சர்வீஸ்களில் ஆய்வு செய்ய உத்தரவு
05-Oct-2024
போடி: மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் போடி சி.பி.ஏ., கல்லூரியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 551 நபர்களுக்கு கலெக்டர் ஷஜீவனா வேலை உத்தரவை வழங்கினார்.தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமா பிரபா தலைமை வகித்தார்.கல்லூரி செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், எம்.எல்.ஏ., சரவணகுமார், போடி தி.மு.க., நகர செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். முகாமில் 148 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 8 ம் வகுப்பு முதல் டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, பி.இ., உள்ளிட்ட தொழிற்படிப்புகள் படித்த 1527 பேர் பங்கேற்றனர். இதில் 551 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உத்தரவை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
05-Oct-2024