மேலும் செய்திகள்
கருத்தரங்கம்
31-Oct-2025
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம், பன்னாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஹைதராபாத் ப்ரோவென்சர்ஸ் எஜீகேசன் கன்சல்டிங் சர்வீஸ் பிரைவேட் நிறுவன இயக்குநர் சீனிவாசன், வேலைவாய்ப்பு பெறும் வழிமுறைகள், தகுதிகளை வளர்த்து கொள்ளுதல், நிறுவனங்களை தேர்வு செய்தல் உள்ளிட்டவை பற்றி பேசினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
31-Oct-2025