மேலும் செய்திகள்
கொரோனா 'அட்மிட்' யாருமில்லை!
08-Jun-2025
கொரோனா தொற்றுக்கு விழுப்புரம் வாலிபர் பலி
07-Jun-2025
போடி: போடி அருகே ராசிங்காபுரம் ஐ.ஓ.பி., பாங்க் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் 37. இவரது தாயார் சரஸ்வதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவரது தந்தை ராஜன் 57, என்பவர் ஆறு மாதத்திற்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் கார்த்திக் தந்தையின் வீட்டிற்கு சென்று கண்டித்ததோடு, சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ராஜன் மகன் கார்த்திக்கை தகாத வார்த்தையால் திட்டி, அடித்து காயப்படுத்தி உள்ளார். சொத்து கேட்டு வந்தால் அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். காயம் அடைந்த கார்த்திக் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்திக் மனைவி அபிராமி புகாரில் போடி தாலுாகா போலீசார் ராஜனை கைது செய்தனர்.
08-Jun-2025
07-Jun-2025