உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எப்.சி., இன்சூரன்ஸ் இல்லாத 16 ஆட்டோக்கள் பறிமுதல்

எப்.சி., இன்சூரன்ஸ் இல்லாத 16 ஆட்டோக்கள் பறிமுதல்

தேனி: தேனியில் முறையான ஆவணங்கள் இல்லாத 16 ஆட்டோக்கள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு ரூ.82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி.,), காப்பீட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களை ஆய்வு செய்து அபராதம் விதிக்க மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவின் பேரில் தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் தேனி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.இதில் 16 ஆட்டோக்களில் முறையான எப்.சி., இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாதது கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. உரிமையாளர்களுக்கு ரூ.82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் கூறுகையில், பெர்மிட், எப்.சி., இன்சூரன்ஸ் சான்றிதழ்கள், டிரைவிங் லைசென்ஸ, மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்றவை வாகனங்களில் வைத்திருப்பது அவசியம். இச் சோதனைகள் தொடரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ