மேலும் செய்திகள்
ஆசிரியை வீட்டில் 14 சவரன் திருட்டு
08-Nov-2024
கடமலைக்குண்டு: கண்டமனூரைச் சேர்ந்தவர் எஸ்தர் 46, இவரது கணவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மூன்று பிள்ளைகளுடன் கண்டமனூரில் வசித்து வந்தார். எஸ்தரின் கணவர் சஞ்சீவி உயிருடன் இருக்கும் போதே அவர்களுடன் கண்டமனூர் புதுகாலனியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்ப நண்பராக பழகி வந்துள்ளார். கணவர் இறந்த பின்பும் நட்பு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜ்குமார் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வீட்டிற்கு வர வேண்டாம் என்று எஸ்தர் சொல்லிவிட்டார். நவம்பர் 15ல் ராஜ்குமார், எஸ்தர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் எஸ்தர் மீண்டும் சத்தம் போட்டு ராஜ்குமாரை அனுப்பி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தனது காளான் பண்ணையில் தீ வைத்து ரூ.1.30 லட்சம் சேதம் ஏற்படுத்தியதாக கண்டமனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Nov-2024