உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் நேற்றிரவு 7:00 மணிக்கு 66 அடியாக உயர்ந்ததையடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால் மூல வைகையில் பெருக்கு ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறுகள் மூலமும் அதிக நீர் வரத்து அதிகமானது. நேற்று காலை 6:00 மணிக்கு 62.47 அடியாக இருந்த நீர்மட்டம் இரவு 7:00 மணிக்கு 66 அடியாக உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 652 கன அடியாக இருந்தது. 13 மணி நேரத்தில் அணை நீர்மட்டம் 4 அடி வரை உயர்ந்துள்ளது. நீர்மட்டம் 68.50 அடியாகும்போது 2வது வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியாகும்போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். இதனைத் தொடர்ந்து நீர் வரத்தைப் பொறுத்து அணையில் உபரி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ