உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரை அருவியில் வெள்ளம் கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

கும்பக்கரை அருவியில் வெள்ளம் கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் 12-வது நாளாக வெள்ளப் பெருக்கினால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் வெள்ளப்பெருக்கால் நுாற்றுக்கணக்கான கிணறுகளில் ஊற்று நீர் அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்காணல், பாம்பார்புரம் பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை நீர்ப்பிடிப்பபுப் பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. அக்.11 முதல் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. அடுத்தடுத்த நாட்களில் வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நேற்று அக்.22ல் 12-ம் நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. அருவிப் பகுதியில் அவ்வப்போது சாரலும், மழையும் பெய்து வருகிறது. அதிகரித்த ஊற்று: கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப் பெருக்கினால் அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீரப்பநாயக்கர் குளம், பட்டத்திக்குளம், பூலாங்குளம், ஆண்டிகுளம், வேளாண்குளம், பாலப்பநாயக்கர் குளம், உருட்டிக்குளம் உட்பட 7 கண்மாய்களுக்கு நீர் வரத்தும், கும்பக்கரை அருவியை சுற்றி 10 கி.மீ., துாரத்தில் உள்ள நுாற்றுக்கணக்கான கிணறுகளில் ஊற்று நீர் அதிகரித்த நிலையில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி