உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கம்பம் : சுருளி அருவியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணி களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கம்பம் பள்ளத்தாக்கில் சாரல் மழை பெய்து வருகிறது. மேகமலை பகுதியில் பகலில் சாரல் மழையும், இரவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை இரவங்கலாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நள்ளிரவில் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடுவதால் அருவிக்கு செல்லும் படிக்கட்டுகளிலும் வெள்ளம் பாய்ந்தோடியது. காலையில் வழக்கம் போல ரோந்து சென்ற ரேஞ்சர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தனர். இதனால் நேற்று காலையில் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தால் குளிக்க அனுமதி வழங்கப்படும் என ரேஞ்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை