உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வருஷநாடு மலைப்பகுதியில் மழை; மூல வைகை ஆற்றில் வெள்ளம்

 வருஷநாடு மலைப்பகுதியில் மழை; மூல வைகை ஆற்றில் வெள்ளம்

கடமலைக்குண்டு: கடந்த சில வாரங்களுக்கு முன், வருஷநாடு மலைப் பகுதியில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ச்சியான மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்து சில நாட்களுக்கு முன் முற்றிலும் நின்று விட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மீண்டும் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மலைப் பகுதியில் மழைக்கான சூழல் தொடர்வதால் வரும் நாட்களில் ஆற்றில் நீர் வரத்து தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு ஆற்றில் உள்ள உறை கிணறுகள் மூலம் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வினியோகம் உள்ளது. தற்போது குடிநீர் கலங்கலான நிலையில் கிடைப்பதால் குடிநீரை காய்ச்சி குடிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் பொது மக்களை அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி