உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

கேரளாவில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

கூடலுார்:கேரளா இடுக்கி மாவட்டத்தில் பகல் நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களாக சற்று மழை குறைந்த நிலையில் இரவு மற்றும் பகலில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, பீர்மேடு, குட்டிக்கானம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மூணாறு செல்லும் ரோட்டில் மதியம் 12:00 மணி வரை பனிமூட்டம் சூழ்வதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில் முகப்பு விளக்கை எரிய விட்டு, வேகத்தை குறைத்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை