மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடும் சக்சை கொம்பன் வனத்துறை தீவிர கண்காணிப்பு
மூணாறு: சக்கை (பலாப்பழம்) கொம்பன் ஆண் காட்டு யானை மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடுவதால் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் பத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்ததுடன், பல சேதங்களை ஏற்படுத்திய அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தமிழகத்தில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் விட்டனர்.அதன்பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அதே பாணியில் சக்கை கொம்பன் எனும் ஆண் காட்டு யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் மீண்டும் நிம்மதி இழந்தனர்.தற்போது அந்த யானை மதம் பிடித்த அறிகுறியுடன் நடமாடி வருகிறது. குறிப்பாக சின்னக்கானல், ஆனயிரங்கல் அணை உட்பட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிகிறது. அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.