உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டில் காட்டுமாடுகள் உலா வனத்துறை எச்சரிக்கை

ரோட்டில் காட்டுமாடுகள் உலா வனத்துறை எச்சரிக்கை

கடமலைக்குண்டு: வருஷநாடு - வெள்ளி மலை ரோட்டில் காட்டு மாடுகள் குட்டிகளுடன் உலா வருவதால் மலை கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் சென்று வர வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலை கடமலைக்குண்டு, வெள்ளிமலை பகுதிகள் மேகமலை புலிகள் காப்பக பகுதி உள்ளன. இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி மற்றும் பல வகை பறவை, விலங்குகள் உள்ளன. தற்போது வனப் பகுதியில் மழை இன்றி வறட்சி நிலவுகிறது. காட்டு மாடுகளுக்கும் பிரசவ காலம் என்பதால் தண்ணீர் தேடி தொட்டிகள், நீர்வரத்து ஓடைகளை ஒட்டி, குட்டிகளோடு உலா வருகிறது. இதனால் கடமலைக்குண்டு - வெள்ளி மலை ரோட்டில் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ரோட்டை மறித்து நிற்கின்றன. பொம்முராஜபுரம், அரசரடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மலைப்பகுதி ரோட்டில் செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் காட்டு மாடுகளை தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் பொதுமக்கள், வாகனங்களில் செல்பவர்கள் பாதுகாப்புடன் அப்பகுதிகளை கடந்து செல்லவும் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ