உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வைத்திருந்த நால்வர் கைது

கஞ்சா வைத்திருந்த நால்வர் கைது

கடமலைக்குண்டு : கண்டமனூர் அருகே எஸ்.ஐ.பாண்டியம்மாள், போலீசார் உதயகுமார், முனீஸ்வரன், ரஞ்சித்குமார் ஆகியோருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். துரைச்சாமிபுரம் வைகை ஆற்றுப் பாலம் அருகே சந்தேகப்படும்படி இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களது இருசக்கர வாகனத்தில் 100 கிராம் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் அவர்கள் மயிலாடும்பாறை தென்பழனி காலனியை சேர்ந்த மணிகண்டன் 21, மூலக்கடையை சேர்ந்த குணசீலன் 25, என்பது தெரிய வந்தது. மணிகண்டன் தெரிவித்த தகவல் அடிப்படையில் தாடிச்சேரியைச் சேர்ந்த மகேஷ் குமார் 29, மாரீஸ்வரன் 24 ஆகியோரிடம் இருந்த 130 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை