மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
02-Dec-2024
தேவதானப்பட்டி: காட்ரோடு அருகே கார் மீது கார் மோதிய விபத்தில் டூவீலரும் சிக்கியது நான்கு பேர் காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காட்டை சேர்ந்த காண்ட்ரக்டர் சரவணக்குமார் 41. அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுந்தரேஸ்வரன் 30. கட்டுமானப் பொருட்கள் வாங்க வத்தலக்குண்டு சென்று விட்டு பண்ணைக்காடு செல்லும் போது, காட்ரோடு அருகே எதிரே வந்த கார் மோதியது.இதில் சுந்தரேஸ்வரன் கார் மீது பின்னால் வந்த டூவீலர் மோதி விழுந்தது. இதில் சரவணக்குமார், சுந்தரேஸ்வரன், டூவீலர் ஓட்டி வந்த ராஜேஷ் 22. அவரது பின்னால் உட்கார்ந்து வந்த உமா மகேஸ்வரி 35. காயமடைந்த நான்கு பேரும் பெரியகுளம், வத்தலகுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய தெலுங்கானா மாநிலம் ஆல்வால் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பாலாஜி ரெட்டியை கைது செய்தனர்.
02-Dec-2024