உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வங்கி மேலாளரை அவதுாறாக பேசிய நான்கு பேர் கைது

வங்கி மேலாளரை அவதுாறாக பேசிய நான்கு பேர் கைது

பெரியகுளம் : பெரியகுளம் கனரா வங்கியில் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி கேட்டு சென்றதில் ஏற்பட்ட பிரச்னையில் வங்கி பெண் மேலாளர்களை அவதூறாக பேசிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.பெரியகுளம் புது பஸ் ஸ்டாண்ட் பிரிவு அருகே கனரா வங்கி உள்ளது. வங்கி கிளை முதன்மை மேலாளர் கவிதா 48. இவரிடம் பெரியகுளம் தென்கரை முத்துவேல் நகரைச் சேர்ந்த சவுந்திரபாண்டி 35, உட்பட மூவர் மகளிர் குழு கடனுதவி கேட்டுள்ளனர். முதன்மை மேலாளர் கவிதா வங்கி பதிவேடுகளை பார்வையிட்டு, மகளிர் குழு கடனுதவி தற்சமயம் வழங்க முடியாது என்றார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்திரபாண்டி உட்பட மூவர் மேலாளரை அரசு பணி செய்யவிடாமல் அவதூறாக பேசினர்.வடகரை போலீசார் சவுந்திரபாண்டியை கைது செய்தனர். கிளை மேலாளர் சுதா 34, கனரா வங்கியில் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்துவிட்டு ஆட்டோவில் வங்கிக்கு செல்ல முறன்றார். முல்லைநகரைச் சேர்ந்த மதியவன் இரும்பொறை 38, தேவதானப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் 32. பெரியகுளம் நேரு நகரைச் சேர்ந்த நாச்சான் 35 உட்பட சிலர், கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை