இலவச மருத்துவ முகாம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி 20ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. பள்ளி நிர்வாகம் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமில் பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல் வரவேற்றார். பள்ளி முதல்வர்கள் உமாமகேஸ்வரி, லதா முன்னிலை வகித்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜய் ஆனந்த் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் அன்பு குமார், ராஜலட்சுமி பல் மருத்துவர் ராதாகிருஷ்ணன் கண் அறுவை சிகிச்சை டாக்டர் நிவேதிதா மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினர். பள்ளி தாளாளர் ஹென்றிஅருளானந்தம், நிர்வாகி தமயந்தி ஆகியோர் டாக்டர்களை கவுரவித்தனர். பங்கேற்ற பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகினி, திவ்யா, பானுப்பிரியா, தமிழ்ச்செல்வி, தெய்வநிரஞ்சனா ஆகியோர்செய்திருந்தனர்.