உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் பொது மருத்துவ முகாம்

கல்லுாரியில் பொது மருத்துவ முகாம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் பஷீர் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள்,பேராசிரியர்கள் ஆகியோருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை, மகளிர் மருத்துவம், உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தல், கண் மருத்துவம், இசிஜி போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களான முகமது பஷீர், முகமது அப்துல்காதர், பைஸ் அகமது, அனிதா, ரஷிதாபானு , ஜன்னத்துல் பிர்தௌஸ் ஆகியோர் செய்திருந்தனர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் குழு சிகிச்சையளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ