உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரத்து குறைவால் இஞ்சி விலை அதிகரிப்பு

வரத்து குறைவால் இஞ்சி விலை அதிகரிப்பு

தேனி : மாவட்டத்தில் இஞ்சி சாகுபடி செய்யப்படுவதில்லை. பிற மாவட்டங்கள், கர்நாடாக மாநிலத்தில் இருந்து இஞ்சி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அசைவ உணவுகள் தயாரிப்பில் இஞ்சி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக சமையலுக்கு பழைய இஞ்சி அதிகம் வாங்குகின்றனர். பழைய இஞ்சி விலை கடந்த சில நாட்களாக கிலோவிற்கு ரூ. 20 வரை அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில் கிலோ ரூ. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் கிலோ ரூ. 120 வரை விற்பனையாகிறது. புதிய இஞ்சி சில்லரையில் கிலோ ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி விலை உயர்வு பற்றி வேளாண் விற்பனை பிரிவு அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பழைய இஞ்சி வரத்து குறைந்துள்ளது. மேலும், தொடர் பண்டிகை காலங்கள் வருவதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இஞ்சி விலை உயர்ந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி