மேலும் செய்திகள்
பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி
18-Sep-2025
தேனி:தேனியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் க.விலக்கு அருகே பழுதாகி நின்றதால் பயணிகள் தவிப்பிற்கு ஆளாகினர். சோழவந்தான் பஸ் டெப்போவிற்கு சொந்தமான அரசு பஸ் நேற்று மதியம் தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு புறப்பட்டது. சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பஸ் தேனி மருத்துவக்கல்லுாரி அருகே சென்ற போது திடீரென 'ஆப்' ஆனது. பின் டிரைவர் மீண்டும் பஸ்சை இயக்க பல்வேறு முயற்சி செய்தும் பயனில்லை. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பிவைக்கப்பட்டனர். சுமார் 2 மணிநேரத்திற்கு பின் பழுது நீக்கப்பட்டு பஸ் அங்கிருந்து புறப்பட்டது.
18-Sep-2025