உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேனி பங்களாமேட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பேயத்தேவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாஜ்தீன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், தேனி கிழக்கு வட்டக்கிளை செயலாளர் ரவிக்குமார், தேனி மேற்கு வட்டக்கிளைத் தலைவர் பவுன்ராஜ் உள்பட பலர் பேசினர். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் லட்சுமி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ