சமூக தணிக்கைக்கான கிராம சபைக்கூட்டம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது. சமூகத் தணிக்கை வட்டார பயிற்றுநர் குருசாமி தலைமை வகித்தார். மண்டல துணை பி.டி.ஓ., பாக்கியலட்சுமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பதிவேடுகள், ஊராட்சி பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், சமூக தணிக்கை குழு மூலம் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.