திருப்பூர் வாலிபர்களுக்கு தேனியில் குண்டாஸ்
தேனி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருமாநல்லுார் பகுதியை சேர்ந்த மதன்குமார் 23, மனோஜ்குமார் 23 இருவரும் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்தனர். இவரை மே1ல் கோம்பை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சிவபிரசாத், கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை சிறையில் உள்ள இருவரிடமும் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.