உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறார்களிடம் அத்துமீறிய இருவர் மீது குண்டாஸ்

சிறார்களிடம் அத்துமீறிய இருவர் மீது குண்டாஸ்

தேனி : சிறார்களிடம் அத்துமீறிய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார். உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு அவரது உறவினர் பாலியல் தொல்லை அளித்தார். அவர்மீது சிறுமியின் பெற்றோர் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் ஜூன் 23ல் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல் கூடலுார் பகுதியில் ஓட்டல் உரிமையாளரான 45 வயது நபர் அவரது உறவினரின் 7 வயது மகன், 8 வயது மகள் ஆகிய இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறாரின் தாய் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜூன் 25ல் ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரும் மாவட்ட சிறையில் உள்ளார்.சிறார்களிடம் அத்துமீறிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை