உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெப்ப அலை, தொடர் மழையால் தென்னை உற்பத்தி பாதிப்பு: விலை இருந்தும் உற்பத்தி இன்றி விவசாயிகள் வேதனை

வெப்ப அலை, தொடர் மழையால் தென்னை உற்பத்தி பாதிப்பு: விலை இருந்தும் உற்பத்தி இன்றி விவசாயிகள் வேதனை

தேனி: மாவட்டத்தில் அதிக வெப்பம், பின் தொடர் மழையால் தென்னை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தேங்காய் நல்ல விலைக்கு விற்பனையானாலும், போதிய உற்பத்தி இல்லாதததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் சுமார் 23,500 எக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. மார்ககெட்டில் சில மாதங்களுக்கு முன் வரை தேங்காய் கிலோ ரூ.25 வரை விற்பனையானது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக ரூ. 50க்கும் விற்பனையாகி வருகின்றன. நேற்று தேனி உழவர் சந்தையில் ரூ.55க்கு விற்பனையானது, தெருக்களில் சில்லரையில் கிலோ ரூ. 60 வரை விற்பனையானது.மாவட்டத்தில் பிப்ரவரி, மார்ச்சில் அதிக வெப்பத்தால் வெப்ப அலை வீசியது. இதனால் தென்னை மரங்களில் பாலைகள் வைப்பது குறைந்தது. இதனை தொடர்ந்து மே மாதத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் அதிகம் காய்கள் பிடிக்கவில்லை. இதனால் உற்பத்தியில் பெரும் அளவில் சரிந்துள்ளது. உதாரணமாக ஒரு மரத்தில் ஒரு குலையில் 35 தேங்காய்கள் இருக்கும் என்றால் பருவநிலை மாறுபாட்டால் 15 முதல் 20 காய்கள் மட்டும் வைத்தது. இதுனால் உற்பத்தி குறைந்தது. இதனால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.

விலை உயர்ந்தது உற்பத்தி சரிந்தது

அம்சராஜா, தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர், கோம்பை: விவசாயிகளிடமிருந்து உரித்த தேங்காய் கொள்முதல் விலை ரூ. 40 க்கும் அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு டன் தேங்காய் உற்பத்தியான தோப்பில் தற்போது பாதியாக குறைந்துள்ளது. இந்த நிலை மாநிலம் முழுவதும் உள்ளது. அதே போல் தென்னையில் பூச்சி, நோய்கள் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள ரகங்களை வேளாண் துறையினர் கண்டறிய வேண்டும். வெப்ப அலை பாதிப்பிற்கு உள்ளாகி, உற்பத்தி குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை