உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகைத் தோட்டம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகைத் தோட்டம்

ஆண்டிபட்டி : டி.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவம், மூலிகைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மூலிகைத்தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.இச் சுகாதார நிலையத்திற்கு டி.சுப்புலாபுரம், புதூர், பெருமாள்பட்டி, அணைக்கரைப்பட்டி, ராஜகோபாலன்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, சக்கம்பட்டி உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள சித்த மருத்துவ பிரிவில் பலரும் மருத்துவ ஆலோசனை, சித்த மருந்துகள் பெற்றுச் செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பல்வேறு அரிய வகை மூலிகைகளுடன் மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.சித்த மருத்துவர் மணிமேகலை, மருந்தாளுநர் சரவணன் ஆகியோர் கூறியதாவது: இங்குள்ள மூலிகை தோட்டத்தில் நெல்லி, ஆடாதோடா, திப்பிலி, ரணகள்ளி, ஓமவல்லி, கற்றாழை, பிரண்டை, மருதாணி, நிலவேம்பு, நாவல் (மரம்) உட்பட பல வகை மூலிகைகள் வளர்கின்றன. ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. மூலிகைகள் தன்மை, பயன்பாடு குறித்து மக்கள் தெரிந்திருப்பது அவசியம். மூலிகைகள் குறித்து பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை