மேலும் செய்திகள்
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
5 minutes ago
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
6 minutes ago
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் மனு
7 minutes ago
தேனி: அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி வழங்க 199 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் பயிற்சி வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது: அரசுப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1,2 படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பயிற்சிகள் வழங்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 199 ஆசிரியர்கள் இப்பயிற்சி வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. அந்த பயிற்சியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின் மாணவர்களுக்கு உள்ள உயர்கல்வி வாய்ப்புகள், பாடப்பிரிவுகள், பாடபிரிவுகள் தொடர்பான வேலைவாய்ப்புகள், அரசுதுறைகள் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி எடுத்துரைக்கப்பட உள்ளன. அவர்கள் மூலம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது என்றனர்.
5 minutes ago
6 minutes ago
7 minutes ago